தன்னை விட வயது குறைவான இளம் நடிகருடன் விழா மேடையில் ரொமான்ஸ் நடிகை சமந்தா… படுவைரலாகும் வீடியோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன்னை விட வயது குறைவான இளம் நடிகருடன் விழா மேடையில் ரொமான்ஸ் நடிகை சமந்தா… படுவைரலாகும் வீடியோ…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

Advertisement

இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் இறுதியாக ‘சகுந்தலம் ‘ திரைப்படம் ரிலீஸ் ஆகி வசூலை வாரி குவித்தது.  தற்போது இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் செப்டம்பர் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. குஷி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதால் அதற்கான புரமோஷன் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன.

Advertisement

குஷி திரைப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகின்றன.

 

Advertisement

அதிலும் குறிப்பாக இப்படத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதல் பாடலான என் ரோஜா நீயா என்கிற பாடல் அனைத்து மொழிகளிலும் வேறலெவல் ஹிட் அடித்தது.

என் ரோஜா நீயா பாடலின் தமிழ் வரிகளை மதன் கார்க்கி எழுதி இருந்தார். அப்பாடல் முழுக்க மணிரத்னம் இயக்கிய படங்களின் பெயரை வைத்தே அவர் வரிகள் எழுதியது அப்பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்தது. இதையடுத்து ஆராத்யா என்கிற பாடல் சித் ஸ்ரீராம் குரலில் மனதை வருடும் விதமாக அமைந்திருந்தது.

Advertisement

குஷி திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதற்கான புரமோஷனுன் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், குஷி படத்தின் மியூசிக்கல் கான்சர்ட்டில் நடிகை சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் குஷி பட பாடலுக்கு நடனமாடி மேடையிலேயே உச்சகட்ட  ரொமான்ஸ் செய்தனர்.

தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in