LATEST NEWS
தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற மூத்த காமெடி நடிகர்..! – தக்க பாடம் புகட்டிய பிரபல சீரியல் நடிகை..!
சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து, தாரை தப்பட்டை உட்பட பல படங்களில் அம்மாவாக நடித்துள்ளார் நடிகை பிரகதி. சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் பற்றி பேசினர். அப்போது மூத்த காமெடி நடிகர் ஒருவர் அவரிடம் பா லியல் ரீ தியாக தகாத முறையில் நடந்துகொண்டது பற்றி முன்பு வெளியான செய்தி பற்றி கேட்கப்ப்ட்டது.அப்போது, என்ன நடந்தது என்பது பற்றி விளக்கம் அளித்தார்.
‘அந்த சம்பவம் உண்மைதான். அவர் என்னிடம் நன்றாகத்தான் பழகி வந்தார். நானும் மூத்த காமெடி நடிகர் என்கிற முறையில் நன்றாகத்தான் பழகினேன். ஒரு படப்பிடிப்பில், இருவரும் சேர்ந்து நடித்தோம். ஒரு நாள் தி டீரென்று அவரது நடவடிக்கையில் எனக்குச் சந்தேகம் வந்தது. அவரது பேச்சும் நடவடிக்கையும் தகா த முறையில் இருந்தன. பாலியல் ரீதியாக அநாகரிகமாக இருந்ததை உணர்ந்தேன். காலை 11 மணி இருக்கும். என்னால் ஒரு கட்டத்துக்கு மேல், அவரது நடவடிக்கையையும் பேச்சையும் ஜீரணிக்க முடியவில்லை.
மாலை வரை காத்திருக்க முடிவு செய்தேன். பிறகு எனது கேரவேனுக்கு அவரை அழைத்தேன். உங்களுக்கு நான் ஏதும் தவ றான சிக்னல் ஏதும் கொடுத்தேனா, அல்லது எனது, பாடிலேங்குவேஜ் உங்களை அ ழைக்கிற மாதிரி இருந்ததா? என்று கேட்டேன். இந்த கேள்வியை அவர் எ தி ர்பார்த்திருக்கவில்லை. அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தலை க விழ்ந்தபடி நின்றார். பிறகு, செட்டில், நீங்கள் நடந்துகொண்ட விதம் கேவலமானது.
என்னால் அதை ஏற்றுக்கொ ள்ள முடியவில்லை. அந்த இடத்திலேயே க டு மையாகத் தி ட்டி யிருப்பேன். அது உங்களுக்கு அவ மா னமாகப் போ யிருக்கும். உங்கள் மீதான இமேஜை மனதில் வைத்து, தனியாக அழைத்து இதைச் சொல்கிறேன் என்று கூறினேன். பிறகு அவர் சென்றுவிட்டார். அதற்கு பிறகு அவர் அநாகரிகமாக நடந்துகொ ள்ளவி ல்லை என்று தெரிவித்துள்ளார்.
