CINEMA
தம்பிங்களா..! ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது… குபேரா பட விழாவில் சரியான பதிலடி கொடுத்த தனுஷ்..!!

நடிகை தனுஷ் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் பாடகி சுசித்ரா கூறிய ஒரு குற்றச்சாட்டு சர்ச்சை ஏற்படுத்தியது .இந்த நிலையில் தன்னைக் குறித்து வதந்தி பரப்பவர்களுக்கு தனுஷ் குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் எவ்வளவு வதந்தி வேண்டும் என்றாலும் பரப்புங்கள். என்னுடைய நெகட்டிவிட்டி என்ன வேண்டுமானாலும் பரப்புங்கள். ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பு என்னை பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்கள்.
தம்பிகளா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா. இங்க இருக்கறவங்க என் ரசிகர்கள் கிடையாது. 23 வருஷமா என் கூடவே வந்த கம்பெனியன்ஸ். நீங்கள் சும்மா ஒரு நான்கு வதந்தியை பரப்பி என்னை காலி பண்ணிடலாம்னு நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் எதுவுமே கிடையாது. ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது” என்று கூறியுள்ளார்.