LATEST NEWS
துணிவு திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சியா?…. அஜித்தை கெட்ட வார்த்தையில் விலாசிய பிரபல நடிகை…. ஓபன் டாக்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே தற்போது வரை படத்தின் புதிய அப்டேட் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் தங்களின் டப்பிங் பணியை முடித்துள்ளது குறித்து பதிவிட்டுள்ளனர். அப்படி துணிவு படத்தில் நடித்துள்ள நடிகை மமதி சாரி திரைப்படம் குறித்தும் டப்பிங் குறித்தும் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், துணிவு திரைப்படத்தில் மிகவும் குறைவான காட்சிகளில் மட்டுமே நான் நடித்துள்ளேன். அதில் கெட்ட வார்த்தை பேசும் படியான காட்சியில் நடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
