LATEST NEWS
அடடே சூப்பர்…. இனியா சீரியலில் ஆலியா மானசாவுக்கு ஜோடி இந்த ஹீரோதான்…. புகைப்படத்துடன் வெளியான தகவல்….!!!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர்.
மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆலியா மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதாவது இவர் விஜய் டிவியிலும் சஞ்சு சன் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தனர்.இதனிடையே மீண்டும் ஆல்யா மானசா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சற்று விலகினார்.
சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது ஆர்யா மானசா சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியான நிலையில் இன்று முதல் தினந்தோறும் இரவு 9 மணிக்கு இனியா சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில் இனியா சீரியலில் கதாநாயகன் விக்ரம் கதாபாத்திரத்தில் ரிஷி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே சன் டிவியில் டீலா நோ டீலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தச் செய்தி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
