LATEST NEWS
பிரபலமான தொகுப்பாளனிகள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி என்னன்னு தெரியுமா?…
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் 2023 ஆம் ஆண்டு டாப் 10 இடத்தைப் பிடித்தவர்களை பற்றி இதில் காண்போம்.
10.பிரியங்கா மோகன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். தற்போது இவர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
9.சாய் பல்லவி:
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி . தற்போது இவர் தெலுங்கில் ‘புஷ்பா 2’ படத்திலும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் ‘எஸ் கே 21’ நடிக்க நடிக்கிறார்.
8.காஜல் அகர்வால்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். தமிழில் எராளனமான படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து ‘கருடா’ படத்தில் நடிக்க உள்ளார்.
7.ஐஸ்வர்யா ராஜேஷ்:
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். தற்போது இடம் பொருள் ஏவல், துருவா நட்சத்திரம் போன்ற படங்களில் நடிக்க உள்ளார்.
6.கேத்ரீன் தெரெஸா:
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலமாக நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கேத்ரீன் தெரெஸா. இவர் தமிழில் கதகளி, கனிதன், கடம்பன், கலகலப்பு 2, அருவம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
5.தமன்னா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா.இவர் ‘அயன்’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து நடித்துள்ளார். அதை தொடர்ந்து ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
4. கீர்த்தி சுரேஷ்;
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ‘சாணிக் காகிதம்’ என்ற திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் தற்போது மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இணைந்துள்ளார்.
3.சமந்தா:
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை சமந்தா. இவர் தற்போது வெப் சீரியஸை நடித்து வருகிறார்.
2.திரிஷா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.
1.நயன்தாரா:
சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அண்ணாத்த, நெற்றிக்கண், தர்பார் ,பிகில் விசுவாசம் ,இமைக்கா நொடிகள், அறம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
