அஜித்தின் ரோல் மாடல் “அயர்டன் சென்னா” யார் தெரியுமா…? இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..!! - cinefeeds
Connect with us

CINEMA

அஜித்தின் ரோல் மாடல் “அயர்டன் சென்னா” யார் தெரியுமா…? இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..!!

Published

on

நடிகர் அஜித்குமார்  நேற்று அயர்டன் சென்னா என்பவரின் சிலைக்கு மரியாதை செலுத்தியது இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் அயர்டன் சென்னா யார் என்று பார்க்கலாம். அதாவது மோட்டார் சாகச உலகத்தில் தனி அடையாளம் பதித்த பிரேசிலியன் ஃபார்முலா-1 ஓட்டப்பந்தய வீரர் தான் அயர்டன் சென்னா.இவர்  தனது திறமையால் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தார். சின்ன வயதிலேயே கார்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிய இவர், கார்டிங் மூலமாகவே  தன்னுடைய ரேசிங் வாழ்க்கையைத் தொடங்கினார்.

1984ஆம்  வருடம் ஃபார்முலா-1 பந்தயத்தில் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார். பல்வேறு அணிகளுக்காக பந்தயத்தில் பங்கேற்ற அவர், McLaren அணியுடன் இணைந்து மூன்று உலக சாம்பியன் பட்டங்களை வென்றார். இவருடைய பந்தய நுட்பம், நேர்த்தி மற்றும் எதிரியை மதிக்கும் மனப்பான்மை, அவரை ரசிகர்களிடையே தெய்வீக அந்தஸ்திற்கு உயர்த்தியது. அவர் பங்கேற்ற போலே பாசோ, மொனாகோ, சில்வர்ஸ்டோன் போன்ற சிக்கலான போட்டிகளில் சாதித்த வெற்றிகள் வரலாற்றில் நினைவாக நிறைந்துள்ளன. இந்நிலையில் தான் 1994ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி, இத்தாலியின் நடந்த பந்தயத்தின் போது, சென்னா ஒரு மோசமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

Advertisement

 

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in