CINEMA
காவல்துறை என்னிடம் விசாரணை நடத்தவில்லை…. இயக்குனர் நெல்சன் விளக்கம்..!!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி மொட்டை கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, நெல்சனிடம் இன்று விசாரணை நடந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள நெல்சன், தன்னை காவல்துறையினர் விசாரிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.