CINEMA
33 வருடங்களுக்கு பின் ரஜினிகாந்த் – மணிரத்னம் கூட்டணியில் புதிய படம்…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் தொடர்பான அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளான டிச.12 ஆம் தேதியன்று வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதவது கடந்த 1991ஆம் ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற “தளபதி” படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணையுமா? என இருவரது ரசிகர்களும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.