LATEST NEWS
மீண்டும் விஜய் பட இயக்குனரை வளைத்து போட்ட சிவகார்த்திகேயன்..? தளபதி இடத்தை பிடிக்க திட்டமா..? ஒருவேளை அது உண்மையா இருக்குமோ..!!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் 20 சதவீதம் மட்டுமே மீதம் உள்ளது என கூறப்படுகிறது. இதற்கிடையே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது.
அமரன் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் பட ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 24-ஆவது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் வைத்து டான் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இது ஒரு புறம் இருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு படங்கள் வெளிவந்த பிறகும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. அப்படி இருக்க தொடர்ந்து விஜய் படத்தின் இயக்குனர்களான ஏ.ஆர் முருகதாஸ், வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி, சர்க்கார் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து விஜய் பட இயக்குனர்களை வைத்து படம் நடிப்பதால் தளபதியின் இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் நினைக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.