LATEST NEWS
கண்ணான கண்ணே சீரியலுக்கு எண்ட் கார்டு போட்ட சன் டிவி…. வெளியான கிளைமாக்ஸ் போட்டோ…. ரசிகர்கள் ஷாக்……!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளன. இதில் பெரும்பாலான சீரியல்கள் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் சன் டிவி சீரியல்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தினம்தோறும் அனைத்து சீரியல்களையும் தவறாமல் பார்ப்பதற்கு தனி ஒரு கூட்டமே உள்ளது. அதன்படி சன் டிவியில் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் கண்ணான கண்ணே சீரியல்.
அப்பா மகள் பாசத்தை வைத்து கதை இருப்பதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் பட்டாலும் ஏராளம்.
இந்நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது என்று ஒரு வாரத்திற்கு முன்பு தகவல் வெளியானது. தற்போது கிளைமாக்ஸ் ஷூட்டிங் நேற்று நடந்து முடிந்துள்ளது.
இறுதியாக மொத்த படக்குழுவினரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு விரைவில் சீரியல் முடிந்து விட்டது என்று கவலை தெரிவித்து வருகிறார்கள்.