#image_title

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்த ரசிகர்கள் மத்திய பிரபலமான ஃபரீனாவின் காதலர் தின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.

 

இந்த சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஃபரினா ஆசாத்.

 

இந்த சீரியலில் வில்லத்தனமான ரோலாக இருந்தாலும் இந்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

இதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கர்ப்பமானதால் அவர் சிறைக்குச் செல்வது போல கதை மாற்றப்பட்டு பிறகு குழந்தை பிறந்தது மீண்டும் அதே சீரியலில் நடிக்க தொடங்கினார்.

 

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகும் சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

அதன்படி நேற்று காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் கை நிறைய ரோஸ்களுடன் ரோஸ் மாடலில் டிசைன் போட்ட உடை அணிந்து போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது.