சினிமாவில் சாதிப்பதற்கு நிறம் ஒரு தடையில்லை என்று பதிவு செய்து சாதித்தவர் தான் நடிகை வினுஷா தேவி.

சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியலில் நடித்து வருகிறார்.

தங்களின் நடிப்பு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காத பலரும் இன்று தங்களின் திறமையை டிக் டாக் போன்ற பல சமூக வலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகிறார்கள்.

அதன்படி டிக் டாக் மூலமாக பிரபலமானவர்தான் நடிகை வினுஷா தேவி.

 

டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு youtube சேனலில் ப்ரொமோட் செய்ய தொடங்கினார்.

அதன் மூலம் இவருக்கு சின்ன திரையில் சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி  திடீரென விலகியதால் அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்தார்.

முதலில் இவரின் கதாபாத்திரம் ஏற்க மறுத்தாலும் நாளடைவில் இவர் கண்ணமாவாக அந்த கதாபாத்திரத்தில் செட் ஆகிவிட்டார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

பாரதிகண்ணம்மா இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதிலும் தற்போது இவர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

நிறம் கருப்பாக இருந்தாலும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில் தற்போது இவரின் சில கலக்கலான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.