மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் மற்றும் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் மற்றும் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி நேற்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. தாவணி கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் உடன்பால் திரைப்படம் வரை தனது நடிப்பால் நகைச்சுவையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி போட்டவர்.

தீவிர சிவபக்தனான இவர் சிவபெருமானின் திருநாளான சிவராத்திரி தினத்தில் உயிரிழந்தே சிவ பக்தன் ஆகிவிட்டார்.தன்னிடம் இருக்கும் அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து அழகு பார்த்த மாமனிதர். வாரி வாரி வழங்குவதில் வல்லவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

திரைப்படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி பன்முகத் திறமை கொண்ட இவர் நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மறைவு சினிமாவிற்கு பெரிய இழப்பு எனக் கூறி நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் மயில்சாமி பற்றிய பிரபலங்கள் கூறும் நல்ல விஷயங்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மயில்சாமியின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in