முழுமையாக ஆன்மீகத்தில் உறைந்த நடிகை சமந்தா…. இப்போ எங்கு இருக்கார் தெரியுமா?…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

முழுமையாக ஆன்மீகத்தில் உறைந்த நடிகை சமந்தா…. இப்போ எங்கு இருக்கார் தெரியுமா?…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் சமந்தா தற்போது முழுமையாக ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். கடுமையான உடற்பயிற்சி மற்றும் பாக்சிங் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது உத்தரகாண்ட் பகுதிக்கு ஷூட்டிங் சென்றுள்ள சமந்தா சிவராத்திரி சமயத்தில் ஆன்மீகத்திற்காக அங்கிருக்கும் பிரபல ஆசிரமத்திற்கு சென்று வழிபட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in