நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தாவுக்கு மீண்டும் இப்படியா?…. ரத்த காயங்களுடன் அவரே வெளியிட்ட ஷாக் புகைப்படம்….!!!! - Cinefeeds
Connect with us

CINEMA

நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தாவுக்கு மீண்டும் இப்படியா?…. ரத்த காயங்களுடன் அவரே வெளியிட்ட ஷாக் புகைப்படம்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இவர்  சிகிச்சை பெற்று அண்மையில் குணமடைந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.  அது மட்டுமல்லாமல் சமந்தா தற்போது முழுமையாக ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். கடுமையான உடற்பயிற்சி மற்றும் பாக்சிங் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் வெப் சீரிஸ்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் சமந்தா. அதற்காக கடுமையான சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டு வரும் அவர் சமீபத்தில் கூட பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் பயிற்சியின்போது சமந்தாவின் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயங்கள் ஏற்பட்ட கையுடன் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.