CINEMA
மூன்று மொழிகளில் வெளியாகும் “தி கோட்”…. தளபதி ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!

இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
படத்தின் டிரைலர் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வட இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வடஇந்தியாவில் வசித்து வரும் பிற மொழி ரசிகர்களுக்காக மூன்று மொழிகளில் வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.