CINEMA
சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு, ஹேம்நாத்க்கும் காதல் ஏற்பட்டது எப்படி…? வெளியான தகவல்….!!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கிலிருந்து அவருடைய கணவர் ஹேம்நாத்தை விடுவித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 2020ஆம் வருடம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஐகோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியிருந்தது. இந்நிலையில், அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவம் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது எப்படி? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சின்னத்திரை நடிகை சித்ராவும், ஹேம்நாத்தும் நண்பர்களாக இருந்த நிலையில் அது ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் பின்னர் சூழ்நிலை காரணமாக பதிவு திருமணம் செய்துக் கொண்டனர்.