ஜே ஜே பட நாயகி இப்போ எப்படி இருக்கார் பாருங்க….புகைப்படம் உள்ளே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜே ஜே பட நாயகி இப்போ எப்படி இருக்கார் பாருங்க….புகைப்படம் உள்ளே…

Published

on

பிரியங்கா கோத்தாரி ஒரு நடிகை மற்றும் மாடல். அவர் பாலிவுட், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றியுள்ளார். ’உன்னை நான்..உன்னை நான்…உன்னை நான்’ எனத் தொடங்கும் ஜே ஜே திரைப்படத்தின் பாடல் இப்போதும் கூட காதலர்களின் பேவரட் பாடல். மாதவன் நடிப்பில் இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப்பெற்றது.இதில் பிரியங்கா கோத்தாரி என்ற அமோகா ஹீரோயினாக நடித்திருந்தார்.

உத்திரப்பிரதேசத்தில் 1983ல் பிறந்த இவர் சினிமாவின் மீது அலாதி ப்ரியம் கொண்டவர். இந்தியில் ஒரு பாடலுக்கு ஆடியது இவருக்கு நல்ல பெயரைக் கொடுக்க மாதவனின் ஜே ஜே திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற 18 பிளஸ் படத்தில் நடித்தார். இது அவரை தேசம் முழுவதும் பேமஸ் ஆக்கியது. ஆனால் தொடர்ந்து அதற்கான சிம்பிளாகவே பார்க்கப்பட்டவருக்கு நல்ல படங்களின் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

Advertisement

இதனைத் தொடர்ந்து கடந்த 2010ல் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டார். தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரை கல்யாணம் செய்து செட்டிலானார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அவரா இது? என கேட்கும் அளவுக்கு அடையாளமே தெரியாமல் மாறிப்போயுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in