TRENDING
திருமண வீடியோவை வெளியிட்ட நடிகர் பிரேம்ஜி! தீயாய் பரவும் காட்சி. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிரேம்ஜியை அவரது சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பல படங்களில் நிச்சயம் ஒரு ரோலில் நடித்திருப்பார். நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் அவர் சினிமாவில் பயணித்து வருகிறார்.40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவருக்கு நீண்ட காலமாக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர் இந்நிலையில் கடந்த வருடம் ஜுன் மாதத்தில் பிரேம்ஜி ட்விட்டரில் போட்டுள்ள ஒரு போட்டோவில் டி-சர்டில் திருமணம் செய்யும் ஜோடி இருக்கிறது.
அதில் கேம் ஓவர் என்று வேறு குறிப்பிடப்பட்டுள்ளது இதனால் பிரேம்ஜி திருமணம் செய்ய முடிவெடித்துவிட்டதாக கூறி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் பின்புதான் தெரிந்தது அவர் விளையாட்டாக பதிவிட்டது இப்போதும் சிங்கிளாக இருக்கும் பிரேம்ஜி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வீடியோவை பகிர்ந்துள்ளார்.பிரேம்ஜி நடித்த ‘தோழா’ படத்தில் இவருக்கு திருமணம் ஆவது போல காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.
அந்த காட்சியை அவர் பகிர்ந்துள்ளதுடன், “கேம் ஓவர் தி எண்ட்” என்று பதிவிட்டிருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா? இல்லை திருமணமா? என்று இன்ப அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
