LATEST NEWS
வைரலாகும் நடிகர் ஆனந்த்பாபுவின் குடும்ப புகைப்படம்…எவ்வளவு அழகான பொண்ணு இருக்கு பாருங்க…!
தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இரண்டிலும் முத்திரை பதித்தவர்கள் மிகக்குறைவு. நாகேஷ் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர், பாலிவுட்டில் முக்கியமாக தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். அவரது நகைச்சுவைக்கு அந்த காலத்தில் பெரியஅளவில் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதும் நாகேஷ் நகைச்சுவைக்கு பெரிய கிரேஷ் உள்ளது. இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவரது மகன் பிரபல நடிகர் ஆனந்த்பாபு. இவர் 1983ல் சினிமாவுக்கு அறிமுகமானார். 80-90களில் பீக்கில் இருந்த ஆனந்த்பாபுக்கு குடிப்பழக்கம் தொற்றிக்கொள்ள சினிமாவாய்ப்புக்களை இழந்துவிட்டார். அதிலிருந்து மீண்டவர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ‘மெளனராகம்’ சீரியலில் முக்கியப்பாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ஆனந்த்பாபுவின் அழகிய குடும்பப்புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் ஆனந்த்பாபுவுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நடிகர் ஆனந்த்பாபுவின் இரண்டுமகன்களான பிஜேஷ், கஜேஷ் ஆகியோர் நடிகர்களாக உள்ளனர்.
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் ஆனந்த்பாபுவின் மகன் பிஜேஸ் முக்கியப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதே போல் கஜேஸ் கல்கண்டு படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனந்த்பாபு சினிமாவில் ஜெயிக்காவிட்டாலும் அவரது வாரிசுகள் நாகேஷின் இடத்தை பிடிக்க விடாப்பிடியாக போராடி வருகின்றனர். ஆனந்த்பாபுவின் அழகிய குடும்பப்புகைப்படத்தைப் பார்த்த பலரும் இவ்வளவு அழகான மகளா? எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.
