LATEST NEWS
10 வருட திருமண வாழ்க்கை….. விவகாரத்து முடிவு எடுத்த சினேகா – பிரசன்னா ஜோடி…. வைரலாகும் புகைப்படம்….!!!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் நடிகை சினேகா பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பத்து வருட திருமண வாழ்க்கையை இருவரும் முடித்துக் கொள்ள இருப்பதாக பரவிய செய்தியை நடிகை சினேகா கேள்வி பட்டுள்ளார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகாவுடன் பிரசன்னா நெருக்கமாக முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
