LATEST NEWS
அம்மாடியோ இத்தனை கோடியா?… மாமன்னன் படத்தில் நடிக்க பகத் பாசில் வாங்கிய சம்பளம்..!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த ரசிகர்களை கவர்ந்த வடிவேலு தற்போது மாமன்னன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்ட நடிகர் தான் பகத் பாசில்.
இவர் திரைப்படத்தில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் நடிப்பதற்கு பகத் பாசில் மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
