அம்மாடியோ இத்தனை கோடியா?… நடிகை அசின் அணிந்திருக்கும் திருமண மோதிரம்… விலையை கேட்டா தலையே சுத்துது…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ இத்தனை கோடியா?… நடிகை அசின் அணிந்திருக்கும் திருமண மோதிரம்… விலையை கேட்டா தலையே சுத்துது…!!

Published

on

கேரளாவில் இருந்து தமிழ் திரை உலகில் நுழைந்து சாதித்த நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவுக்கு அடுத்ததாக இருப்பவர் அசின். இவர் முதன்முதலாக கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கேரளா பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.

தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, அஜித்துடன் வரலாறு மற்றும் கமலஹாசன் உடன் தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளம் வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார்.

Advertisement

இவ்வாறு சினிமாவில் டாப் நடிகையாக இருந்த இவர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோ மேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டே சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது . சமீபத்தில் நடிகை அசின் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அதிர்ச்சி அளிக்கும் செய்தி இணையத்தில் வெளியான நிலையில் அந்த தகவல் உண்மை இல்லை என்று அசின் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் நடிகை அசின் திருமணத்தில் நடந்த விஷயம் குறித்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதாவது அசின் அணிந்திருக்கும் திருமண மோதிரத்தின் விலை மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in