தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகையா?… ஆசை பட நடிகை சுவலட்சுமி குறித்து பல வருடம் கழித்து வெளியான சீக்ரெட்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகையா?… ஆசை பட நடிகை சுவலட்சுமி குறித்து பல வருடம் கழித்து வெளியான சீக்ரெட்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் தான் நடிகை சுவலட்சுமி. அஜித் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பு பெங்காலி சினிமாவில் ஓட்டுறான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு கோகுலத்தில் சீதை, லவ் டுடே மற்றும் என் ஆசை ரோஜாவே உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சூலம் என்ற சன் டிவி சீரியலில் நடித்தார். அதன் பிறகு சுவலட்சுமி கலிபோர்னியாவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

Advertisement

இந்நிலையில் சுபலட்சுமி குறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், முன்னாடி நடிகையாக இருந்த சுவலட்சுமி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து கனவு கன்னியாக இருந்த போதும் கவர்ச்சியில் நடிக்க மறுத்துவிட்டார். இவர் தமிழில் மொத்தம் 13 திரைப்படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார். இவர் பெரும்பாலான படங்களில் சேலை கட்டி கொண்டு போர்த்திக் கொண்டுதான் நடித்தார்.

இவரை எத்தனையோ நடிகர்கள் வற்புறுத்தியும் கவர்ச்சியாக நடிக்கவில்லை. அதே சமயம் பல நடிகர்கள் காதல் வலை வீசிய போது அதனை இவர் அறுத்துக் கொண்டு வெளியே வந்தார். நடிகர் கார்த்திக் தன்னுடன் நடித்த நடிகைகள் பலரையும் தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்த நிலையில் அவரின் வலையில் சிக்காத ஒரே நடிகை சுவலட்சுமி தான் என பயில்வான் ரங்கநாதன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in