LATEST NEWS
விற்பனைக்கு வரும் விஜய் டிவி… டிஸ்னி நிறுவனம் திடீர் முடிவு… போட்டி போடும் பிரபல மூன்று நிறுவனங்கள்…!!
தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது தான் விஜய். இந்த தொலைக்காட்சியை ஸ்டார் குழுமம் வாங்கிய பிறகு ஸ்டார் விஜய் ஆனது. அதன் பிறகு அதனை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் வாங்கியது. விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட் ஸ்டார் இணையதளம் ஆகியவை வெற்றிகரமாக டிஸ்னி நிறுவனம் தற்போது நடத்தி வருகின்றது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவுக்கு டிஸ்னி நிறுவனம் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹாட்ஸ்டார் தளத்தை வைத்துக்கொண்டு தற்போது தொலைக்காட்சியை மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தச் செய்தியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியை வாங்குவதற்கு மூன்று நிறுவனங்கள் கடும் போட்டி போட்டு வருகிறார்கள். அதாவது ஜியோ நிறுவனம், டாடா நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் ஆகியவை விஜய் தொலைக்காட்சியை வாங்க தற்போது முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
