VIDEOS
16 வருடங்களுக்கு முன்பே படத்தில் நடித்த மாரி செல்வராஜ்… யார் படத்தில் தெரியுமா?.. இதுவரை பலரும் பார்க்காத அன்சீன் வீடியோ..!!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு கோலிவுட் வட்டாரத்தில் மாரி செல்வராஜ் என்ற பெயர் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்த நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமே இவரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அந்த அளவிற்கு மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாடே கொண்டாடும் இயக்குனராக மாறி இருக்கும் மாறி செல்வராஜ் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமாவில் நடிகராக வேண்டும் என்று சினிமாவிற்குள் வந்து தற்போது தவிர்க்க முடியாத இயக்குனராக மாறி செல்வராஜ் மாறி உள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்குனர் ராம் என்பவரிடம் உதவி இயக்குனராக கற்றது தமிழ், தங்க மீன்கள் மற்றும் தரமணி போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது மாரி செல்வராஜ் கற்றது தமிழ் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
