சீனாவின் ‘சாயம்’ வெளுத்தது..! ஏசி ரயிலுக்குள் அலப்பறை செய்யும் பயணிகள்…வாயடைத்துப் போன இந்திய யூடியூபர்..! சோஷியல் மீடியாவில் தீயாகப் பரவும் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீனாவின் ‘சாயம்’ வெளுத்தது..! ஏசி ரயிலுக்குள் அலப்பறை செய்யும் பயணிகள்…வாயடைத்துப் போன இந்திய யூடியூபர்..! சோஷியல் மீடியாவில் தீயாகப் பரவும் வீடியோ..!

Published

on

சீனாவின் அதிவேக புல்லட் ரயில்களின் நவீன வசதிகளைப் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வரும் வேளையில், அங்குள்ள சாதாரண உள்ளூர் ரயில்களின் நிஜ நிலைமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் பிரபல டிராவல் யூடியூபர் நோமாட் சுபம் சீனாவுக்குச் சென்றபோது அங்கிருந்த ஒரு உள்ளூர் ரயிலின் உட்புறக் காட்சிகளைப் படம்பிடித்துள்ளார். ஏசி வசதி கொண்ட அந்த ஜெனரல் பெட்டிக்குள் பயணிகள் கூச்சமின்றி சிகரெட் புகைப்பதும், தரைப்பகுதியில் படுத்து உறங்குவதும் போன்ற காட்சிகள் இணையவாசிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

ரயிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்ட ஏசி பெட்டிக்குள் இளைஞர்களும் பெண்களும் எவ்விதத் தயக்கமுமின்றி பகிரங்கமாக சிகரெட் பிடிப்பதை இந்த வீடியோவில் காணலாம். அடர்ந்த சிகரெட் புகையால் பெட்டிக்குள் மூச்சு விடுவதற்கே கடினமாக இருப்பதாக சுபம் தெரிவிக்கிறார். மேலும், ரயிலில் இருக்கை கிடைக்காத பயணிகள் தரையிலேயே துணி விரித்து அமர்ந்திருந்தனர்; ஒரு பயணி லோயர் பெர்த் இருக்கையின் அடியில் உள்ள சிறிய இடைவெளியில் முழுமையாக நுழைந்து படுத்திருந்தார். கழிவறை செல்லும் வழியையும் பயணிகள் அடைத்துக்கொண்டிருந்த நிலையில், இருக்கை இல்லாத சிலர் பிளாஸ்டிக் அல்லது துணியால் ஆன மடிப்பு நாற்காலிகளைத் தங்களுடன் கொண்டு வந்து நடைபாதையில் போட்டு அமர்ந்து பயணித்தனர்.

Advertisement

https://www.instagram.com/reel/DaiorlBjSsI/?utm_source=ig_web_button_share_sheet

இந்திய ஜெனரல் பெட்டிகளைப் போலவே கூட்ட நெரிசலும் சமாளிக்கும் முறைகளும் இருந்தாலும், சீன ரயில்களில் இரண்டு முக்கிய வித்தியாசங்கள் இருப்பதாக சுபம் குறிப்பிட்டுள்ளார். முதலாவது, அங்குள்ள மலிவான ஜெனரல் பெட்டியிலும் ஏசி வசதி உள்ளது; இரண்டாவது, இதன் கதவுகளும் ஜன்னல்களும் எப்போதும் மூடப்பட்டிருக்கின்றன. @thebharatpost_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “சீனாவின் வளர்ச்சி மாடலின் உண்மை நிலை வெளிவந்துவிட்டது” என்றும், “என்னதான் இருந்தாலும் அங்குள்ள ஜெனரல் பெட்டியிலாவது ஏசி இருக்கிறதே” என்றும் பலவாறாக விவாதித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in