LATEST NEWS
பிக் பாஸ் பின்னணியில் பேசுபவருக்கு….. ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா?….. அம்மாடியோ….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பிக் பாஸ் சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண்டு போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்ளிட்ட 20 பேர் களமிறங்கியுள்ளனர்.
கடந்த ஐந்து சீசன்களை காட்டிலும் இந்த சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஜி பி முத்து காகவே பலரும் இந்த பிக் பாஸ் சீசனை ரசித்துப் பார்த்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் ரசிகர்களிடையே பிக் பாஸ் பின்னணியில் ஒலிக்கும் குரலுக்கு பெரிய ரசிகர்கள் உண்டு.
அவர் யார் என்று ஒவ்வொரு சீசன்களிலும் கேட்கப்பட்டு வந்த நிலையில் அவரது புகைப்படம் சமீபத்தில் வெளியானது. அவர் பெயர் சதீஷ் சாரதி சச்சினானந்தம். கடந்த ஐந்து சீசன்களில் இவருக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து லட்சம் சம்பளமாக தரப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் தற்போது இந்த சீசனில் ஒரு லட்சம் உயர்த்தி 6 லட்சம் சம்பளம் வழங்கப்படுகின்றதாக, அதாவது ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது .
