VIDEOS
தனலட்சுமி குணமே இப்படித்தான்…. மகள் குறித்த உண்மையை போட்டுடைத்த தனலட்சுமியின் அம்மா…. வைரல் வீடியோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து தானாக முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு இரண்டாவது வாரம் அசல் கோளாறு அவரைத் தொடர்ந்து மூன்றாவது வாரம் செரினா என அடுத்தடுத்து நான்கு பேர் வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் விஜே மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள தனலட்சுமி அனைவரிடமும் கோபமாக நடந்து கொண்டு எந்த ஒரு இடத்திலும் பொறுமை இல்லாமல் இருப்பது பலரையும் வெறுப்படைய வைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவர் மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததாக பிக் பாஸில் கூறிய நிலையில் அவரை நெருங்கிய தோழி ஒருவர் சமீபத்தில் இது அனைத்தும் பொய், அவள் மிகப்பெரிய பணக்காரி எனக் கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தனலட்சுமியின் அம்மா தனது மகளின் குணம் பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
