கௌதம் கார்த்திக் – மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும்…. உறுதியான தேதி…. எப்போ திருமணம் தெரியுமா?….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

கௌதம் கார்த்திக் – மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும்…. உறுதியான தேதி…. எப்போ திருமணம் தெரியுமா?….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் அவ்ப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றியதன் மூலம் காதல் மலர்ந்துள்ளது.  இருந்தாலும் அவ்வப்போது பல நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

அண்மையில்  நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் காதல் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதில் இருவரும் ஒரே மாதிரியான போஸ்ட் போட்டு தங்களது காதலை வெளிப்படையாக கூறினர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். அவர்களின் திருமண தேதி குறித்த விவரம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in