LATEST NEWS
தனுஷ் இல்லாமல் பொங்கலை கொண்டாடிய ரஜினி குடும்பம்…. இணையத்தில் வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் ரஜினிகாந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இதனிடையே அண்மையில் ரஜினியின் தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினி தனது மனைவி மற்றும் பேரன்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அதில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இல்லை. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
