திக் திக் நிமிடங்கள்.. “நாலாபுறமும் சூழ்ந்த அசுர வெள்ளம்.. 2-வது மாடியில் மரண பயத்தில் தவித்த குடும்பம்..!” நெஞ்சை உறைய வைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திக் திக் நிமிடங்கள்.. “நாலாபுறமும் சூழ்ந்த அசுர வெள்ளம்.. 2-வது மாடியில் மரண பயத்தில் தவித்த குடும்பம்..!” நெஞ்சை உறைய வைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரப் பெருவெள்ளத்தில் வீடு ஒன்றை வெள்ளம் சூழ்ந்தபோது, அதற்குள் சிக்கிய ஒரு குடும்பம் மரண பயத்தில் தவித்த பதைபதைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேபாள வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சீற்றத்தின் போது, பச்சை நிறத்திலிருந்த ஒரு வீட்டின் தரைத்தளத்தைச் சேறும் சகதியுமான வெள்ள நீர் முழுமையாக மூழ்கடித்தது. இதனால் அந்த வீட்டின் இரண்டாவது தளத்தில் தஞ்சமடைந்திருந்த குடும்பத்தினர், நாலாபுறமும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் பல மணி நேரம் உயிருக்குப் பயந்து தவித்துள்ளனர்.

https://twitter.com/tyron_blaze/status/2093377268965896513/video/1

Advertisement

அந்தப் பெருவெள்ளத்தில் கார்களும் இதர வாகனங்களும் மிதந்து வந்து, அவர்கள் நின்றிருந்த தளத்தின் அருகே மோத முற்பட்டது அவர்களுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கிய போதிலும், அந்த வீடு எவ்வித சேதமுமின்றி அசைந்து கொடுக்காமல் நின்றதால் அக்குடும்பத்தினர் நல்வாய்ப்பாகப் உயிர் தப்பியுள்ளனர். பின்னர் வெள்ளம் சற்று வடிந்ததும், மேல் தளத்திற்கு வந்த குடும்பத்தினர் தங்களைக் காப்பாற்றுமாறு துணியைச் சுழற்றி கூச்சலிட்டு சமிக்ஞை செய்துள்ளனர். சற்றுத் தொலைவில் இருந்தவர்கள் எடுத்த இந்தத் திக் திக் நிமிடங்களின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி, காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அசைக்க முடியாத வலிமையுடன் நின்ற அந்த வீடும், பாதுகாப்பாக மீட்கப்பட்ட குடும்பத்தினரும் நெட்டிசன்கள் மத்தியில் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in