LATEST NEWS
நியூ லுக்கில் கலக்கும் நடிகர் சிம்பு…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனிடையே சிலம்பரசனை பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கும் கேள்வி திருமணம் எப்போது என்பதுதான்.
அண்மையில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக பெண்பார்த்து வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது.
இருந்தாலும் சிம்புவின் திருமணம் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சிம்பு ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக தாய்லாந்தில் இருந்து நடிகர் சிம்பு சென்னை திரும்பி உள்ளார். நீண்ட நாட்களாக பத்து தல திரைப்படத்தின் தோற்றத்தில் சிம்பு வலம் வந்து கொண்டிருந்தார்.
அதனால் இந்த திரைப்படத்திற்கு அடுத்து சிம்புவை புதிய தோற்றத்தில் பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ள சிம்பு நீண்ட தலைமுடியுடன் கூடிய புதிய தோற்றத்தில் காணப்படுகிறார்.
சென்னையில் நடைபெறும் பத்து தல திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சிம்புவின் நியூ லுக் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.
