LATEST NEWS
சீரியல் நடிகை ஆலியா மானசாவுக்கு இவ்வளவு வயசு தானா?…. வெளியான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்….!!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.
அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.
அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர்.
மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆலியா மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆலியா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு சிறிது இடைவேளை எடுத்து பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
சன் டிவியில் இனிய என்ற சீரியலில் நாயகியாக இவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே கயல் சீரியலில் நாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.
இதனிடையே இருவரும் சீரியல்களில் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஆலியா மானசா நேற்று தனது 28 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேசமயம் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
