LATEST NEWS
திடீரென குடும்பத்தோடு மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்…. காரணம் என்ன?…. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் சாய் தீனா. அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான தெறி, பிகில் மற்றும் மாஸ்டர், தனுஷ் நடித்த வடசென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் மற்றும் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார்.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவை செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பல மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். இந்த செயலை பார்த்த பலரும் திரைப்படங்களில் மட்டும் தான் இவர் வில்லன் ஆனால் நிஜத்தில் என்னவோ இவர் எப்போதும் ஹீரோ தான் என பாராட்டினர். இந்நிலையில் சாய் தீனா தற்போது தனது குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார்.
புத்த பிக்கு ஒருவர் முன்னிலையில் அவர் புத்த மதத்திற்கு மாறிய நிலையில் அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதனை பார்த்த பலரும் சாய் தீனா புத்த மதத்திற்கு மாறியது குறித்து பாசிட்டிவ் மட்டும் நெகட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். இருந்தாலும் இவர் திடீரென புத்த மதத்திற்கு மாறிய காரணம் என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
