LATEST NEWS
பேரன், பேத்தியுடன் குதூகலமாக இருக்கும் குடும்பம்…. பழைய நினைவுகளை புகைப்படங்களாக பகிர்ந்த ராதிகா மகள்….!!!
தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இதனிடையே ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் கடந்த 2016 ஆம் ஆண்டுபெங்களூரை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அபிமன்யு மீதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு ரயன் தனது அம்மாவின் நினைவாக ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளார்.
பேத்தியை கொஞ்சி விளையாடும் ராதிகா சரத்குமாரின் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தற்போது பழைய நினைவுகளை மீண்டும் நினைவுகூறும் விதமாக ராத்யா பிறந்து ஒன்பது மாதங்களில் கொரோனா காலம் என்பதால் வீட்டிலேயே சிம்பிளாக மொட்டை அடித்து காது குத்தி விசேஷம் நடத்தினர்.
தாத்தா சரத்குமாரின் மடியில் வைத்து மொட்டை அடித்து பேத்திக்கு காது குத்தி காதணி அணிவித்து குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.
அந்த புகைப்படங்களை தற்போது ரேயன் இணையத்தில் பகிர்ந்து குடும்பத்தின் மகிழ்ச்சியையும் பழைய நினைவுகளையும் மீண்டும் நினைவுகூர்ந்து உள்ளார். அதை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
