குழந்தையாய் மாறிய தந்தை!… வரமாய் வந்த தாரம்!… இதுபோல கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்… வைரலாகும் கவிஞர் சினேகன் வெளியிட்ட வீடியோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

குழந்தையாய் மாறிய தந்தை!… வரமாய் வந்த தாரம்!… இதுபோல கிடைக்க கொடுத்து வைச்சிருக்கணும்…  வைரலாகும் கவிஞர் சினேகன் வெளியிட்ட வீடியோ…

Published

on

தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன்.

 

Advertisement

அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கவிஞர் சினேகன் பிரபல நடிகையான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின்  திருமணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து வாழ்த்து கூறினர்.

பாடலாசிரியர் சினேகனும், வெள்ளித்திரை, சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.  இவர்களது திருமணம் கமல் ஹாசன் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. 43 வயதான கவிஞர் சினேகன், 27 வயதான கன்னிகா ரவியைத் திருமணம் செய்து கொண்டது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றது.

Advertisement

இருப்பினும் இவர்கள் தற்பொழுது மகிழ்ச்சியான தம்பதிகளாக தங்களை விமர்சித்தவர்களின் கண்முன்னே வாழ்ந்து காட்டி வருகின்றனர். இருவருமே சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள். தற்பொழுது சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தந்தைக்கு பணிவிடை செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் எமோஷனலாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Snekan S (@kavingarsnekan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in