LATEST NEWS
தந்தை இறப்பிற்கு பிறகு வெளியே வந்த நடிகர் அஜித்…. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் திரைப்படம் ஏதாவது வெளியாகிறது என்றால் ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்வது வழக்கம். அதனைப் போலவே இவரின் திரைப்படங்கள் குறித்த எந்த தகவல் மற்றும் அவரின் புகைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் அதனை இணையத்தில் அதிக அளவு வைரல் ஆக்கி வருவார்கள்.
சமீபத்தில் அஜித் நடித்த வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது.
துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் திடீரென விலகினார். இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மயில் திருமேனி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டதாக கூறப்பட்டது.
இதனிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் சமீபத்தில் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பிறகு அஜித் முதன்முதலாக வெளியே வந்த போது ஒரு ரசிகருடன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
https://twitter.com/TrollywoodX/status/1644389547554504709
