LATEST NEWS
பருத்திவீரன் பட நடிகர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் செவ்வாழை ராஜு. இவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் பல திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல திரைப்படங்களில் அடுத்தடுத்த துணை கதாபாத்திரம் மற்றும் காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் தற்போது 70 வயதாகும் செவ்வாழை ராஜு உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
