LATEST NEWS
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மரணம்… கல்லீரல் அலர்ஜியால் உயிரிழந்த ரஜினி பட நடிகர்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் கைலாஷ்நாத். இவர் டி ராஜேந்திரனின் ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தில் தம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மலையாள நடிகர் ஆன இவர் கேரள மாநிலம் மன்னார் பகுதியை சேர்ந்தவர். மிமிக்ரி கலைஞர் ஆகவும் நாடக நடிகராகவும் இருந்த இவர் 1977 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
அதன் பிறகு மலையாளத்தில் ஏதோ ஒரு ஸ்வப்நம், சீதா கல்யாணம் முட்பட 163 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாலைவனச்சோலை மற்றும் வள்ளி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
சின்னத்திரை தொடர்களிலும் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் 65 வயதாகும் இவரின் மறைவுக்கு திரை துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
