ஒட்டுமொத்த கிராமமும் ஒன்றுதிரண்டு மாரிமுத்துவை கண்ணீர் மல்க வழியனுப்பிய தருணம்… வெளியான புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒட்டுமொத்த கிராமமும் ஒன்றுதிரண்டு மாரிமுத்துவை கண்ணீர் மல்க வழியனுப்பிய தருணம்… வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

அதே சமயம் இவர் நடித்து முடித்துள்ள பல திரைப்படங்களும் அடுத்தடுத்து வழியாக உள்ளன. குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் டப்பிங் பணியின் போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார்.

இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று அவரின் இறுதி ஊர்வலம் தேனி பசுமலை தேரி கிராமத்தில் நடைபெற்றது.

Advertisement

அந்த கிராமத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் நீ அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு வழியனுப்பிய காட்சிகள் பலரையும் கண்கலங்க வைத்தது.

மாரிமுத்துவின் உடல் காற்றோடு கரைந்து போனாலும் அவருடைய நினைவுகள் என்றும் மனதை விட்டு நீங்காது என்பது மட்டும் உறுதி. தற்போது அவரின் இறுதி ஊர்வல புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in