நம்ம தளபதி விஜயின் மகள் திவ்யாவா இது?… செம்ம சூப்பரா டான்ஸ் ஆடுறாங்களே… வைரலாகும் வீடியோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம தளபதி விஜயின் மகள் திவ்யாவா இது?… செம்ம சூப்பரா டான்ஸ் ஆடுறாங்களே… வைரலாகும் வீடியோ…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. லியோ திரைப்படத்தில் அர்ஜுன், கௌதம் மேனன் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆக்சன் என்டர்டெயின்மென்ட் ஜெனரில் உருவாக உள்ள இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். விஜய்க்கும் – சங்கீதாவிற்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதை சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்டும் வருகிறது.

ஆனால், சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் பொய்யாக தான் இருக்கிறது என மாணவர்கள் சந்திப்பில் விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யாவுடன் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்திற்கு விஜய் சென்றுள்ளார். அந்த திருமணத்தில் விஜய்யின் மகள் திவ்யா நடனமாடி அசத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in