இது வேற லெவல் மேக்கிங்… தளபதி 68 படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் விஜய்… வெளியான புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இது வேற லெவல் மேக்கிங்… தளபதி 68 படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் விஜய்… வெளியான புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர்.

இந்த திரைப்படத்தின் பூஜை செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் படப்பிடிப்பின் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.. அதே சமயம் இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கியுள்ளன.

Advertisement

அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜிஸ் க்கு சென்றுள்ளனர். அங்கு விஜய் ஃபுல் பாடி ஸ்கேனிங் செய்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படங்களில் வருவதைப் போல செம்ம ஹை டெக் ஆக இருக்கும் ரிசர்ச் சென்டரில் விஜய் பாடி ஸ்கேனிங் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jagadish Palanisamy இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jagadish_palanisamy)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement