LATEST NEWS
நடிகர் விஜய் சேதுபதியின் மகனா இது?… அப்பாவுக்கே டஃப் கொடுப்பார் போலயே… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பார். இவர் இறுதியாக விடுதலை திரைப்படத்தின் சூரி உடன் இணைந்து நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இவர் மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிட்டா பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதே சமயம் அட்லீ இயக்கும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி ஹீரோ மற்றும் வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இதனிடையே 2003 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சூர்யா , ஸ்ரீஜா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.
