43 வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் 41 வயது நடிகையுடன் உலகம் சுற்றும் நடிகர் வினய்…. வைரல் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

43 வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் 41 வயது நடிகையுடன் உலகம் சுற்றும் நடிகர் வினய்…. வைரல் புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் திரையுலகில் கலந்த 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் நடிகர் வினய்.

அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பட்டாளமே உருவானது.

Advertisement

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயங்கொண்டான், மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் இவர் நடித்தார்.

இப்படி பல திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு எந்த படமும் ஹிட் கொடுக்கவில்லை. இதன் காரணமாக ஹீரோவுக்கு வரவேற்பு இல்லாததால் வில்லனாக அவதாரம் எடுத்தார்.

Advertisement

அதன்படி மிஸ்கின் இயக்கிய துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக இவர் நடித்து அசத்தியிருந்தார்.

இவரின் உயரத்திற்கும் தோற்றத்திற்கும் ஏற்ப வில்லன் வேடம் இவருக்கு செட் ஆனதால் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இப்படி பல திரைப்படங்களில் நடித்த இவர் சாக்லேட் பாயாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

Advertisement

தற்போது இவர் டீசல் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே 43 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

Advertisement

இவரின் திருமணம் குறித்து பல இடங்களில் கேட்கப்பட்ட போதிலும் இவர் அது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் வினய்  நடிகை விமலா ராமனை நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும் இருவரும் பல இடங்களுக்கு டேட்டிங் சென்றுள்ளதாகவும் அடிக்கடி தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் ஒன்றாக மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலாவும் சென்று உள்ளனர்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

நடிகை விமலா ராமன் தமிழில் பாலச்சந்தர் இயக்கிய பொய், இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக ராமன் தேடிய சீதை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இருவரும் ஹங்கேரி நாட்டுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களை வினய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in