‘படத்தோட ப்ரோமோஷனுக்காக இப்படி இறங்கிட்டாரே’ நடிகர் விஷால்… வைரலாகும் வீடியோ… விமர்சிக்கும் ரசிகர்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘படத்தோட ப்ரோமோஷனுக்காக இப்படி இறங்கிட்டாரே’ நடிகர் விஷால்… வைரலாகும் வீடியோ… விமர்சிக்கும் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் விஷால். தற்பொழுது விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி இன்னும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்க, 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது.  இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.தற்பொழுது இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள்  மிக வேகமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இத்திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் விஷால். இதற்காக அவர் Foodies findings என்ற பிரபல யூ டூபருடன் சேர்ந்து படத்தினை ப்ரோமோஷன் செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாக ரசிகர்கள் ‘பட ப்ரோமொஷனுக்காக இப்படி இறங்கிடீங்களே’  என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Yuvarani Mohan🧿 (@foodies_findings)

Advertisement
Continue Reading
Advertisement