‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்… தட்டி தூக்கிய நடிகர் கார்த்தி…  – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்… தட்டி தூக்கிய நடிகர் கார்த்தி… 

Published

on

நடிகர் கார்த்தி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் நடிகர். மக்களுக்கு சாதாரணமாக காதல், நடனம், காமெடி படங்கள் என கொடுக்காமல் தனது கதை தேர்வில் வித்தியாசம் காட்டி மக்களுக்கும் ஒருபுதுவித அனுபவத்தை கொடுத்து வருகிறார். பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என சூப்பர் டூப்பர் ஹிட படங்களை கொடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் மட்டும் இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. அவை பொன்னியின் செல்வன், விருமன் மற்றும் சர்தார் இந்த மூன்று படங்களுமே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. வசூலில் சாதனையும் படைத்துள்ளது.

Advertisement

தற்பொழுது நடிகர் கார்த்திக் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தினை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை அனு இமானுவேல் நடிகர் கார்த்திக் ஜோடி ஆக நடித்து வருகிறார். நடிகர் கார்த்தியின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம்  நான் மஹான் அல்ல.

நடிகர் கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2010ல் வெளிவந்த படம் நான் மஹான் அல்ல. இத்திரைப்படத்தை வெண்ணிலா கபடி குழு  இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருந்தார். தற்பொழுது இத்திரைப்படம்  பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ‘நான் மஹான் அல்ல’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது கார்த்தி இல்லையாம்.

Advertisement

நடிகர் விஷ்ணு விஷால் தான் ‘நான் மஹான் அல்ல’ படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்ததாகவும், தான் அந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக கூறி இருக்கிறார். அதுதான் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது படமாக அமைந்திருக்க வேண்டுமாம். அது மட்டும் நடனத்திருந்தால் தனது கெரியர் வேறு விதமாக இருந்திருக்கும் என விஷ்ணு விஷால் கூறி இருக்கிறார். தற்பொழுது இத்தகவல்  இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in