LATEST NEWS
நடிகர் விஷ்ணு விஷால் வீடா இது?…. அரண்மனை மாதிரி இருக்கே.. புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்…!!
கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டிய இவர் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர்தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக இவரின் நடிப்பில் மோகன்தாஸ், ஆரியன் மற்றும் லால் சலாம் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே விஷ்ணு விஷால் இறுதியாக கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக மோகன்தாஸ், லால் சலாம் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் பிரம்மாண்ட வீட்டின் முன்பு நின்று அழகான புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இது உங்க வீடா படு பிரம்மாண்டமாக இருக்க என கூறி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
