LATEST NEWS
13 வருடங்களுக்கு முன்பு ரஜினி , விஜய்யின் சம்பளம்… இன்று தளபதியின் மெகா வளர்ச்சி… அதுவும் இத்தனை கோடி வித்தியாசமா..?
இன்றைய தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படும் ரஜினி இன்னும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் ஸ்டைலும் இன்றும் மாறாமல் அப்படியே உள்ளது. தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். அதே சமயம் அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கம் லால்சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க முன்னணி நட்சத்திரமாக திகழும் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ரஜினி மற்றும் விஜய்க்கு இடையே ரசிகர்கள் பலரும் வீடியோக்களை வெளியிட்டு வைரலாகி வருவது வழக்கம். அதன்படி தற்போது ரஜினி மற்றும் விஜயின் சம்பளத்தை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதாவது நடிகர் ரஜினி தற்போது 90 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
அதுவே விஜயை பார்த்தால் அவர் 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினி அவர்களுக்கு 25 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் விஜய்க்கு 7 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது. இன்று ரஜினி அவர்களை விட 100 மடங்கு சம்பளம் என்பது சாதாரண விஷயம் கிடையாது நடிகர் விஜய் உண்மையான ரோல் மாடல் தான் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
2010 : #Vijay‘s salary is 7cr and #Rajni‘s salary is 25cr 2023 : #Vijay‘s salary is 200cr and #Rajni‘s salary is 80cr
Who thought #Vijay would overtake #Rajni with atleast 100cr salary margin..
This man @actorvijay is truly an inspiration 🙏🐐 pic.twitter.com/58bt3LJQUj
— Arun Vijay (@AVinthehousee) July 7, 2023
